என் உள்ளம் கவர்ந்த என் பழயை பதிவுகள்

என் கவிதைகள்

நான் எழுதி இருக்க வேண்டிய
கவிதைகள் எல்லாம்
இப்போது எங்கோ ஒரு repository இல்
வெறும் கோடுகளாய் (Code)

முதல் பூ

களம் :
காதலிக்கு கொடுக்கும் முதல் பூவுடன் இணைக்க வேண்டிய கவிதை .

காதலியே ,
உன் கண்கள் , தன் ஈர்ப்பு விசையில்
பால் வெளி கிரகங்களை தடம் மாறி
சுற்ற செய்யும் வல்லமை கொண்டது
ஆதலால் , இரவில் நிலவின் அழகை ரசிக்க
முயலாதே .

நிலவுக்கு நீ ஒன்னும் குறைந்தவள் இல்லை
உனக்கு தெரியாது
நிலவொளி மட்டுமே பட்டு மலரும்
மந்தாரை ,அன்று உன் நிழல் பட்டு
மலர்ந்தது

அது மட்டுமா , உன் கூந்தல் சேர நினைத்து
படர்ந்து வளரும் மல்லிகை ?
எங்கு நீ உடல் வருத்தி
குனிந்து பறிக்க வேண்டி இருக்குமோ
என்று ,உன் உயரதிற்கு கிளை
வளர்த்து நிர்கறது

பண்ணிரண்டு வருடத்திற்கு
ஒருமுறை பூக்கும் குறிஞ்சி ?
உனக்காக தினமும் பூக்கிறது

வாசம் இல்லா கனகாம்பரம் ?
உன் கூந்தல் சேர எண்ணி
என்றுமே வாசம் வீச ,ஒற்றை காலில்
தவம் இருக்கிறது

உன்னை சேர ,இப்படி பட்ட
இயற்கையின் முயற்சிகளே
தோல்வியடையும் போது,
நான் எப்படி உன்னை
கவர முடியும் ?

உடனே ஒரு ஒப்பந்தம் செய்தேன்
ஆம் அந்த மலர்களோடு தான்
நான் அந்த மலர்களை உன் கூந்தல் சேர்பேன்
அவை, என் காதலை உன் காதில்
அழாகை சொல்லும்

இதோ என் முதல் தூது
இந்த ரோஜா .

சந்திராயன் காதல்

வெண் நிலவே,நான் சந்திராயன்
இயந்திரமாய் இருந்த நான்
உன் அருகில் வந்ததும் மந்திரமாய் உயிர்த்து எழுந்தேன்
உன் வாசம் எனக்கு சுவாசம் .

உன் புகைப்படம் எடுத்து பூமிக்கு
அனுப்ப எனக்கு கட்டளை .
உன் புகை படம் எடுத்தேன்
அதை எனக்கு மட்டும் வைத்து கொண்டேன்

நான் சரியாக இயங்கவில்லை என்றார்கள் ,
உன்னை எபோதும் கரையோடு பார்க்கும் அவர்களுக்கு
எப்படி தெரியும் , உன் கள்ளம் இல்லா அழகின் அதிர்வுகளும்
அதனால் நான் அடைந்த பாதிப்பும் ?

இல்லை , உன்னை சூரியனை விழுங்கும் பாம்பாய்
சித்தரித்தவர்களுக்கு தான் புரியுமா , உன்
அன்பு ,நிழல் கொடுக்கும் அன்பு

எனக்கு தெரியும் , உனக்கு ஒரு காதலன் உண்டு
அவன் பெயரும் தெரியும்,
நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அழைத்தாலும்
அவன் வருவது நடக்காது
அவன் கர்வம் அவனை விடாது

கரை ஓரத்தில் உன்னை காதலிப்பதாய்
ஆடி , ஓடி சொன்னாலும்
அவன் உள்ளத்தில் நீ இல்லை
ஆம் ஆழ்கடலில் அலை இல்லை

இதோ உன்னை தேடி நான் வந்திருகிறேன்
இப்போதே சொல்
என் காதலை ஏற்றுகொள்

இல்லையேல்
"தரை இரங்கும் போது வேகம் குறைக்கும்
குடை இயங்காமல் , மடிந்தது சந்திராயன் "
என்று என் தற்கொலை செய்தி
நாளை பூமியெங்கும் ஒளிபரப்பாகும்

02/02/3015
நிலவை தன் வசம் கொண்ட அந்த குளத்தருகே 
நான் உன்வசபட்டு காத்திருந்தேன்

ஒரு தவளை குளத்திற்குள் குதிக்க 
அந்த சாரல் பட்டு , தூங்கிக்கிடந்த நிலவு விழிக்க 
குளத்தில் இருந்து எழுந்து நீ வருவது போல் 
கற்பனை செய்தேன்

“இரவு தான் எத்தனை அழகு ?
இரவு உன்னையும் , உனக்கும் 
இந்த  முடிவில்லா அண்டத்தை 
அடையாளம் காட்டும் இயந்திரம் 
அதை காதல் செய்து அழிபதேனோ ?”
என்று வினவி வந்த என்க்கு 
இது ஒரு புது அனுபவம் தான் 

மெல்லிய பூ வசம் கலந்து  ,
வந்த அந்த தென்றல் 
என் முகம் தொட்டு சென்றது 
புதிதாய் பிறந்தவன் போல் என்னுள் 
ஒரு சிலிர்ப்பு 

பறவைகள் விழிதுவிட்டன 
இரவு முடிந்திருக்க வேண்டும் 
நான் இன்னும் காத்திருந்தேன் 

தூரத்தில் ‘வெறும்’  நிழலாய் 
நீ சொன்னது போலவே 
உன் இனத்தவர் போல் 
மிக உயரமாய் 
மூன்றே விரல் கொண்ட கைகளுடன்
பல ஒளிவருடங்கள் கடந்து வந்து
எனக்கு தெரியாமல் நின்று 
என்னை காதலிக்கும் நீ, இருப்பது தெரியாமல் 
நான் இன்னும் காத்திருந்தேன்

No comments:

Post a Comment