நேர்முகம் - தொடர்ச்சி 1

பகுதி ஒன்றின் தொடர்ச்சி

நீண்ட நேர எண்ண ஓட்டங்களுக்கு பிறகு எழுத்தாளர் தொடர்ந்தார்.

அதுவரையில் நான் வலிப்பு வந்தவரை அவ்வளவு அருகாமையில் பார்த்ததில்லை. எந்த விதமான முதலுதவி செய்தும் அனுபவம் இல்லை. எதுவும்  செய்ய தெரியாமல் என் இயலாமையை எண்ணி அவனை போலவே என் உள்மனதும் துடித்தது. அதே நிலைமை தான் அங்கிருந்த மற்றவர்களுக்கும். கணினியின் கலைகள் பல தெரிந்தும் உயிர் காக்க எதுவும் செய்ய தெரியாத வேடிக்கை கூட்டம் நாங்கள்.

ஐந்து நிமிடம் கழிந்தும்  அவன் உடல் துடிப்பு நிற்கவில்லை, மாறாக  துடிப்பின் வேகம் அதிகமாகி  இருந்தது . அவன் கால்களும் கைகளும் தரையில் உராசி உராசி சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன.

எங்கள் அலுவலக  மனித வளக்குழு உறுப்பினர் ஒருவர் , சிங் , வந்து முதலில் எங்கள் அனைவரையும் ஒதுங்க செய்து இருக்கைகள் நடுவே இடைஞ்சலில்  இருந்த அவனை இழுத்து நடுவில் கிடத்தினார்.
அவன் சட்டை பொத்தான்களை கிழித்தெறிந்தார்.   இறுக்கமாக இருந்த அவன் ஆடைகளை சிறிது தளர்த்தினார் .அவன் தலையை சற்று உயர தூக்கிபிடித்து அவன் கக்கிய திரவத்தை துடைத்தார்.

பொறுமையாக அவன் வலிப்பின் வேகம் குறைந்து. மயங்கினான்.அவனை மீட்பு நிலையில் படுக்க வைத்து சுவாசத்திற்கு இடையூறாக எதாவது அடைப்பு இருகிறதா என்று பார்த்தார்.


"ஹி இஸ் ஆல்ரைட் நௌ ,சுட் கெட் அப் சூன்" என்று அவர்  குருவறை நோக்கி நடந்தார். நாங்கள் அனைவரும் அவரை மிகுந்த மரியாதையுடன் பார்த்து வியந்தோம்.
those who know things, respect; others,admire. என்றொரு இயம்பல் உண்டு we all admired him that day.

--------

பொறுமையாக கண் விழித்தான் தணிகை . எழுந்து அவன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.ரத்த சிவப்பாய் இருந்தன அவன் கண்கள். அவன் நண்பர்கள் பலர்  நலம் விசாரிக்க  வந்திருந்தனர், அவன் அமைதியாய் புன்னகைத்து "இட்ஸ் ஆல்ரைட்" என்றான் .

ஒரு மணி நேரம் கழித்து "என்னப்பா  ஆச்சு , என்ன இது எல்லாம்" என்றேன்.

"என்ன பயந்துடீங்களா..."

"வெறும் பயம் இல்ல,மரண பயம் .என்ன பண்றதுன்னே தெரியல எனக்கு.அந்த சிங் வரலனா என்ன ஆயிருக்கும்னே தெரியல "

"ஒண்ணும் ஆயிருக்காது "

"என்ன சொல்ற?"

"எனக்கு இந்த மாறி பல தரவ வலிப்பு  வந்திருக்கு, தானா சரி ஆயிடும். சின்ன வயசுலேந்து இப்படிதான். ஒரு தரவ மட்டும் ரொம்ப சீரியஸ் ஆய்டுச்சு . அதனால ஆம்புலன்ஸ்ல போற வாய்ப்பு  கிடச்சுது" என்றான்.

என்னால் சிரிக்க முடியவில்லை.

---------

அதன் பிறகு நானும் தணிகையும் நல்ல நண்பர்களாகி இருந்தோம், இல்லை ஒரு அண்ணனும் தம்பியுமாய் இருந்தோம். அந்த சம்பவத்திற்கு பிறகு அவனுக்கு ஒரு நாளும் வலிப்பு வரவில்லை.நாங்கள் அவனுக்கு அப்படி ஒரு பிரெச்சனை இருப்பதையே மறந்து போனோம் . 

அவன் கனவுகளை நிஜமாக்க உழைக்கும் வேகம் என்னை பல முறை ஆச்சிர்யப்பட வைத்துள்ளது. கடினமான உழைப்பாளி.நானும் என் கனவுகள் தேடி, ஒரு புது நிறுவனத்தில் குழு தலைவராக  வாய்ப்பு கிட்டவே ,பிரியா விடை பெற்று கிளம்பினேன் .

--------

(தண்ணீர் குடித்து தொடர்ந்தார் எழுத்தாளர் )

ஆகஸ்ட் 2011. காலம் ஒரு பெருங்குயவன். அவன் சுழற்சியில் மாறாதது எதுவும் இல்லை. அப்பேர்பட்ட காலத்தின் சுழற்சியில் நான் எம்மாத்திரம்.

நான் அப்போது  திறமை மிக்க தொழிலாளிகளுக்கான நுழைவிசைவு  பெற்று கடல் கடந்து பணியில் இருந்தேன். அந்த கால கட்டத்தில் எனக்கும் தணிகைக்கும் அவ்வளவாக தகவல் பரிமாற்றங்கள் கிடையாது. சொல்லப்போனால் சில ஆண்டுகளாகவே இல்லை.

ஒரு நாள் கூகிள் உரையாடல் தளத்தில் தணிகையிடம் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது

"அண்ணா i am in  US"

"wow  great  news .i  know you  will make  it  "  என்று பதில் அனுப்பி இருந்தேன் .

அவன் இணையதளத்துடன் இணையாத நிலையில்  இருந்தமையால் உரையாடலை தொடர  முடியவில்லை .

வேறொரு நாள் எனக்கு  facebook நட்பு விண்ணப்பம் அனுப்பி இருந்தான். அவனுடைய வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் அதில் பதிவு செய்தான் . அதை தொடர்கையில் அவனுடன் வாழ்வது போலவே இருந்தது.


அந்த பதிவுகள் அவன் இந்த வாழ்கையோடு போராடி, கனவுகளை நிஜமாக்கியதன் சின்னங்களாக இருந்தன. அவன் பதிவாக்கிய புகைப்படங்கள் அவன் வெற்றி களிப்பின் பிம்பங்கள் . அவன் வாழ்கையை ரசிப்பதை நானும் ரசித்தேன். உழைப்பின் ஆக்கத்தை எனக்கு எப்பவுமே பிடிக்கும்.


facebook - ஜூன் 10 2012

அவன் தொலைபேசி எண் மாறியதையும்,அவன் புதிய தொலைபேசி எண்ணையும் பதிவிட்டிருந்தான் .


facebook - ஜூன் 15 2012

This is to inform you that Thanigai Arasu (A) Murali soul will be reaching us on Monday morning (18/06/2012) at 10AM. And his final interment will be happening around 2.00pm on the same day. So please inform to all his friends to participate in his burial and pray for his soul to get peace.

please reach out to 91-98346745x for home address

அந்த நிலைத்தகவல் என்னை நிலைகுலைய செய்தது

----------------------

நான்: அதிர்ந்து  போனேன்


நேர்முகம் தொடரும் ....

  



No comments:

Post a Comment