நேர்முகம்

நான்:
வணக்கம் . நீங்கள் உங்கள் எழுத்து பணிக்கு நடுவே எனக்கு நேரம் ஒதுக்கியதற்கு நன்றி . அடுத்த வாரம் வெளி வரப்போகும்  உங்கள் 'வாழ்க்கை ஒரு கேள்விக்குறி ' சிறுகதை தொகுப்பு பற்றி ஒரு கலந்துரையாடல் செய்யலாம் என்று வந்தேன். 

எழுத்தாளர் :
அது ஒரு பெரிய தொகுப்பாயிற்றே . 
நேரம் போதுமா ?

நான்:
சரி தான். அதில் தங்களை மிகவும் பாதித்த ஒரு கதை பற்றி மட்டும் பேசலாமா ?


எழுத்தாளர் :
நல்லது . அதில் வரும் 'தணிகையின் கதை' என்னை மிகவும் பாதித்த ஒன்று .சொல்லப்போனால் அந்த தொகுப்பு எழுதுவதற்கே அந்த கதை,  இல்லை, அந்த நிகழ்வுதான் காரணம் . அதை  பற்றி பேசலாமா ?

நான்:
நிச்சயமாக.  
நீங்கள் கதை இல்லை நிகழ்வு என்றீர்கள் அப்படியானால் அது நிஜமாக நடந்ததா ?

எழுத்தாளர் :
அனைத்து கதைகளும் நிஜங்களின் நிழல் தானே . நம் ஆழ்மனதில் பதிந்து போன சில நினைவுகள், நாம் எழுதும் கதைகளாக உருமாறும். 
Every memory is a story waiting to be told.Ink waiting to fill pages.

நான்:
அருமையான விளக்கம்.எனக்கு ஒரு யோசனை. நான் கேள்விகள் கேட்டு நீங்கள் விடை தருவதை விட , உங்களால் அந்த  'தணிகையின் கதை' க்கு  அடித்தளமாக அமைந்த நிஜ நினைவுகளை பகிர முடியுமா? 
அது எமது வாசகர்களுக்கு அவர்களுடய நினைவுகளை கதைகளாக எப்படி பதிவு செய்வது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கும்.

எழுத்தாளர் :
நிச்சியமாக.

அது ஜூலை 2006.

அவனை பணியில் ஒரு தொடக்க நிலையாளராக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். 
பெயர் தணிகை.
சில சம்பிரதாயப்படியான  வாழ்த்துகள்  பரிமாரிக்கொண்டோம் அவ்வளவுதான்.

தணிகை என் குறுவறை தொழிலகத்தோழராக இருப்பினும் நானும் அவனும் அதிகம் பேசிக்கொண்டதில்லை அவனுக்கென்று  ஒரு நட்பு வட்டம் இருந்தது அவர்களுக்குள் குதூகலமாக பேசுவான் மற்றபடி அமைதியான குணம் படைத்தவன்.

 ஒரு நாள், அலுவலகம் முழுவதும் அவனை பார்க்கும் விதம் ஒரு காரியம் செய்தான் . மிக மிக நூதனமாக வடிவமைக்கபட்ட ஒரு காற்சட்டை அணிந்து  வந்தான்.அது அரிசி மாவு அரைத்து  கொட்டும் இயந்திரத்தின் வாயில் கட்டி தொங்கவிடப்படும் துணி குழாய் போல் இருந்தது. கிழிந்து அங்கு அங்கு தொங்கும் வாழைமர பட்டை போலும் இருந்தது . முட்டியில் இருந்து பாதம் வரை நிறைய சின்ன சின்ன பட்டைகள் தொங்கின .

குபீர் சிரிப்புடன் "டேய் , என்ன டா  நாய் எதாச்சு தொறதிச்சா " என்றேன் . அவன் " அண்ணா நீங்களுமா ?" என்றான் .

"ஓ நான் மட்டும் இல்லியா ?"

"இந்த பேன்ட் போட்டாலும் போட்டேன் காலைல எங்க அம்மா கூட ரெண்டு தோச கம்மியாதா வெச்சாங்க. என்ன பாத்துட்டு குளிக்கப்போன அப்பா நான் கிளம்புரவரைகும் பாத்ரூம் விட்டு வெளிய வரவே இல்ல. தங்கச்சி , அவளோட பிரண்ட்ஸ் வரத்துக்கு முன்னாடி தயவு செஞ்சு கிளம்பிடுன்னு சொல்லிட்டா.பக்கத்து வீட்டு  பாப்பா... உழுந்து  உழுந்து  சிரிக்குது.ஆனா எதிர் வீட்டு கனகா மட்டும் இவளோ வர்ஷத்துல இன்னிக்கு தா என்னைய பாத்துருக்கு "

"அட அது ஏதோ புள்ள புடிகிறவன்னு நெனைச்சு பயந்திருக்க  போகுது "

"அண்ணா.... போதும்... அழுதுடுவேன் . ஆபீஸ் உள்ள என்டர்  ஆனதுலேந்து  எங்க போனாலும் ஒரே என்கௌன்ட்டரா இல்ல இருக்கு "

"பின்ன நீ ஃப்ரைடே காஷுவல்னு இது மாறி எல்லாம் டிரஸ் போட்டுட்டு  வந்தா HR  டீம்ல பாலிசி சேஞ்ச் பண்ணிட போறாங்க "

" ஃப்ரைடே மட்டும் இல்ல அண்ணா, இன்னிக்கு என் பர்த்டே "

"ஓ ஹாபி பர்த்டே டா . ஆனா இந்த மாரி டிரஸ் போட்ட.. மேனி மேனி  மோர் ரிடர்ன்ஸ் மட்டும் கிடையாது " என்றேன்.


மதியம் அவன் நண்பர்கள் அனைவரும் அவனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டினார்கள்.என்னையும்  வர சொன்னான் . நண்பர்கள் அவன் முகம்  முழுவதும்  கிரீம்  பூசி  கோமாளியாக்கி  இருந்தனர் .அந்த காட்சிகளும் நினைவுகளும் இன்னும் மழை சாரல் பட்ட  பசும் புல் போல் பசுமையாய் என் மனதில் நிற்கிறது.அந்த வாசனை கூட மறக்கவில்லை இன்னும்.

(ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்தார்) 
இப்படியாக கலாய்ப்புகளுக்கும் ,கேலிகளுக்கும் இடைய நடந்து முடிந்தது அவன் பிறந்தநாள் கொண்டாட்டம் .

 பின்னர் மாலை ஒரு மூன்று  மணி அளவில்  கேக்கும், பலத்த மத்திய உணவும் , சொகுசான பஞ்சு  நாற்காலியும் என் நினைவுகளை கனவுகளாக்கி கொண்டிருக்க , தூக்கம் கலைய தணிகையிடம் பேச்சு கொடுத்தேன் .

"அப்பறம்  என்ன பர்த்டே resolution ? "

அவனும் சட்டென  தூக்கத்தில் எழுந்தவனாய்  "அதுவா அண்ணா ..onsite  போகணும் ..அது தான் என் கனவு "

"கனவுன்னு உன் மூஞ்சிய பாத்தாலே  தெரியுது , இப்படி தூங்கினா பின்ன? இன்னும் கொஞ்ச நேரம்  கழிச்சு எழுப்பி இருந்தா onsite   போய்  இருப்பியோ . சாரி டா அதுக்குள்ள எழுப்பிட்டேன் ."

"அண்ணா.. சீரியஸ் . நீங்க onsite போயிட்டு  வந்துடீங்க "

"அட பேசினதே இல்ல , என்ன பத்தி இது எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்க ?"

"உங்க கிட்ட பேசினதே இல்ல ஆனா உங்கள பத்தி எல்லாம் தெரியும். நான் உங்க ப்ளாக் ரீடர் . நீங்க எனக்கு ஒரு ரோல் மாடல் "

"பரவால்லையே  , எனக்கும் ஒரு ப்ளாக் ரீடர் , நானும் ஒரு ரோல் மாடல் .ஆச்சிரயகுறி .
உனக்கு இன்னும் நிறைய வயசிருக்கு தணிகை . IT கம்பெனில வேலைக்கு சேந்த அன்னைகே உனக்கு விசா போட்ட மாறி .யு வில் பி தேர் சூன் "

சடாரென்று அவன் இருக்கையில் இருந்து சுருண்டு கீழே விழுந்தான் தணிகை . தூண்டிலில் சிக்கி கரைக்கு இழுக்கப்பட்ட மீனாக துள்ளி துள்ளி துடித்தான் . கைகளும் கால்களும் ஒரு பக்கமாக மடங்கி மடங்கி விரிந்தது. கண்களின் கரு வழிகள் மேல் இமைக்குள் காணாமல் போயிருந்தன .நாக்கு வெளிய தொங்க எரிமலையில் இருந்து பொங்கும் குழம்பு போல நுறை தள்ளியது .அவன் உடல் தரையில் கிடந்து வெடுக்கு வெடுக்கு  என உரச அலுவலகம் முழுவதும்  'சர்ர்ர்ர்'  'ச்ர்ர்ர்ர்ர்' என்று ஒலி எழும்பியது . நான்  அதிர்ச்சியில் நிலை குலைந்து  நின்றேன் .

ஒரே பதட்டம்,கலக்கம் அனைவரும் அவனை சுற்றி செய்வதறியாது திகைத்து  நின்றோம் .

"என்ன ஆச்சு ? " என்றேன் என் பக்கத்தில் நின்றவறிடம் .

"வலிப்பு "

"ம் என்ன ?"

"பிட்ஸ்" என்றார் அவர் .

-----
அந்த நினைவுகளில் தொலைந்தவராய் கண்கள் கலங்க கற்சிலையாய்  இருந்தார் எழுத்தாளர் .

நான் என் நெற்றியில் பூத்திருந்த வேர்வை துளிகளை துடைத்து,  மேசையில் இருந்த கண்ணாடி டம்ளர்ல்  இருந்து  கொஞ்சம் தண்ணிர் பருகினேன் .

நேர்முகம் தொடரும்... 
தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் 

No comments:

Post a Comment