முந்தைய பாகுதிகள் நேர்முகம் , நேர்முகம் - தொடர்ச்சி 1
அடுத்த நொடியின் புதிர் புரியா யாவர்க்கும் ,
கண்ணிருந்தும் பார்வையில்லை.
வாழ்க்கையில்,
யார் தான் குருடனில்லை?
'வருங்காலம்' ஒளித்துவைத்திருக்கும்,
புதையல் கிட்டும் வரைக்கும்,
பூமியில்
யார் தான் ஏழை இல்லை?
குருட்டு ஏழைகளுக்கு ,எதிர்கால கனவெதற்கு ?
'காலம்'. அது தான் உன் அரசன்.
அடிமையே,போ. பொறுத்திரு.
உன் 'காலன்' வரும் வரை
அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பதே இந்த வாழ்கையின் சுவாரசியம் , ஆனால் ஒரு சில சமயங்களில் அந்த நொடி வராமலே இருந்திருக்கலாம் என்று தோன்றும் . அது போன்ற நொடிதான் நான் அந்த தணிகையின் மரண செய்தியை படித்த நொடி .
உள்ளம் குமுறியது , இல்லை இது உண்மையாக இருக்க முடியாது , இது எப்படி சாத்தியம் . உள்ளம் நம்ப மறுத்தது .உனடே அந்த பதிவில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்
"ஹலோ , யார் பேசறிங்க . facebook status பாத்தேன் . என்ன இது "
"நான் தணிகையின் தங்கை . அண்ணா இறந்துட்டார்.. " நீண்ட நேர மௌனம் .கலங்கிய குரலில் "ரெண்டு நாளைக்கு முன்னாடி... US லேந்து போன் வந்தது"

"அய்யய்யோ என்ன ஆச்சு மா " பதற்றம் தலைகேறியது
" volleyball விளையாடிட்டு வீட்டுக்கு வந்து பாத்ரூம்ல குளிக்கும் போது"
"எப்படி மா இது சாத்தியம் "
"அந்த ஊரு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல குளிக்கும் போது வலிப்பு வந்து bathtubகுள்ள விழுந்து தண்ணில மூழ்கி, மூச்சு விட முடியாம செத்துடார்னு சொல்றாங்க உண்மையா என்ன நடந்ததுன்னு தெரியல " என்றாள் மனதை உலுக்கும் அழுகையுடன்
"ஐயோ கடவுளே ..." நீண்ட நேர மௌனத்தின் பிறகு அவள் சற்றே தேறியவுடன் ."உதவி ஏதாவது வேணுமா . நான் US ல தா இருக்கேன் " என்றேன்
"எல்லாம் முடிஞ்சிடுச்சு , அண்ணா bodya எடுத்துட்டு வர்றதுதா ரொம்ப கஷ்டம் ஆய்டுச்சு "
"அம்மா அப்பா எப்படி இருக்காங்க ?"
"அம்மா அழுகைய நிறுத்தவே இல்ல , அப்பா அழவே இல்ல பேய் அரஞ்ச மாறி இருக்கார் "
"அங்க நடக்க வேண்டியது எல்லாம் யார் பாத்துகுறாங்க ?"
"அண்ணா friends cousins இருக்காங்க "
"நான் அப்புறமா திருப்பி கால் பண்றேன் , எதாச்சு வேணும்னா சொல்லு மா .."
"அண்ணா ..நீங்க யாரு ?"
"நான் 'ஜன்னல்' மா , அவன் collegue . அவனோட 2006 - 2008 ல வொர்க் பண்ணி இருக்கேன் "
"உங்கள தெரியும் அண்ணா , உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கான் . நீங்க எல்லாம் அங்க தா இருக்கீங்கனு தெரிஞ்சு இருந்தா , அண்ணாவ இங்க எடுத்திட்டு வரதுல கொஞ்சம் கஷ்டம் கம்மியாயிருக்கும் . அந்த ஊரு போலீஸ் அவன் ரூம் மேட்சையும் , எங்களையும் ரொம்ப கஷ்ட படுத்ட்டாங்க "
"என்னமோ போ மா , கொஞ்சம் கூட நம்ப முடியாத விஷயம் ம்ஹ...நீ தைரியமா இருமா . அண்ணன் நான் இருக்கேன் . திரும்ப கால் பண்றேன் "
அந்த உரையாடலின் கனம் தாளாமல் , நிஜம் உரைத்த போது ஓ வென அழுதேன்
------
நானும் எழுத்தாளரும் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் சிந்தனையில் ஆழ்திருந்தோம் .
முற்றும்.
--by ஜன்னல்
பி .கு : இந்த கற்பனை கலந்த நிஜம் இன்னுயிர் நீத்த என் நண்பன் தணிகைக்கும். அவன் நினைவாக இன்றும் அவன் முகபுத்தக பக்கத்தில் அவன் பழைய புகைப்படங்கள்,அவனுக்கு பிடித்த youtube இசை சுட்டிகள் ,அவர்கள் குடும்பத்து சுப நிகழ்வுகளுக்கான அழைபிதழ்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் தணிகையின் தங்கைக்கும் சமர்ப்பணம்.
எழுத்தாளர்:

![]() |
தணிகை .என் நண்பன். |
No comments:
Post a Comment